பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

227




1.விளையாட்டுக்களானது மனதுக்குள்ளே மறைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் நிதர்சனமாக அறிந்து மகிந்து கொள்ளவும், திருப்தி அடைந்து கொள்ளவும் உதவுகின்றன. ஆகவே, இதை உளவியலின்படி, கனவு நிலைக் கொள்கை (Psycho-analytic Theory) என்றும் கூறுவார்கள்.

கனவு நிலை என்பது உளவியலின்படி, நிலை தாழ்ந்தது. குழப்பி விடுவது போன்றே விளக்கம் பெறுவதால், விளையாட்டுக்கள் எல்லாம், நினைவுகளினால்தான் நிகழ்கின்றனவே தவிர, கனவுகளுக்காக ஆட்படுவதில்லை என்ற காரணம் காட்டி, இந்தக் கொள்கையைக் குறை கூறுவாரும் உண்டு.

2. மனிதர்கள் தங்களது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு, சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற உதவுவதற்காக பல சந்தர்ப்பங்களை விளையாட்டுக்கள் ஏற்படுத்தித் தருகின்றன; இதை சுய வெளிப்பாட்டுக் காெள்கை (Self expression Theory) என்று கூறுகின்றார்கள்.

3. சமூகத் தொடர்புக் கொள்கை என்ற ஒன்றும் உள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், சமுதாயத்தில் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த ஆசையை, விளையாட்டு மூலம் நிறைவேற்றிக் கொள்ள முன்வருகின்றனர்.

விளையாட்டில் ஈடுபடுகிறபோது, பலதரப்பட்ட ஆண்கள், பெண்களுடன் பழகும் வாய்ப்புகள் நிறையவே கிடைக்கின்றன. அவர்கள் பழகும் வட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்ட வருகிறது. அதன் காரணமாக, அவர்களுடைய சமூகப் பழக்கவழக்கங்களும், பண்பாடு