பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா5. சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய சாணக்கியர் இப்படிக் கூறுகிறார், “கல்வி என்பது ஒருவரை தேகசக்தி உள்ளவராக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளித்து, தேசப்பற்று உள்ளவராக மாற்றும் மணியான பணியைச் செய்கிறது.”

6. புகழ்மிக்க மதத்தலைவரான சங்கராச்சாரியார் கூறுகிறார். “கல்வி என்பது ஒருவரின் ஆத்மாவை அறிந்து கொள்ள உதவும் ஒப்பற்ற வழிகாட்டி..”

இப்படி, வாழ்வில் மேன்மைபெற்ற மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள், மாண்புமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் எல்லோரும் கல்வியைத் தாங்கள் விரும்பும் திசைப்பக்கமே இழுத்துச்சென்று விளக்கம் கூறினாலும், ஒரு குறிப்பை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

“கல்வி என்பது அறிவுக்கான பயிற்சி மட்டுமல்ல. அது இதயத்தைப் பண்படுத்தி, ஆத்மாவை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, களிப்பூட்டுகிறது.’

இந்த உண்மையான இலட்சியப் பணியினால் தான் கல்விக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிட்டுகிறது.

கல்வியின் சிறப்பு :

தொட்டிலில் தொடங்கி சுடுகாடு செல்லும் வரையிலும் ஒருவருக்கு கல்வி உறுதுணையாக நிற்கிறது.

இல்லங்களில், பள்ளிகளில், சமுதாயச் சந்தைகளில், சந்தர்ப்பங்களை வழங்கும் இக்கட்டான சூழ்நிலைகளில், எல்லாம் கல்வி இடம் பெறுகிறது. அறிவை வளர்த்து விடுகிறது.

மனிதனிடம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் பழக்க வழக்கங்களில் எல்லாமே நல்ல பண்பாடுகளை