பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
229j
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாஉடற்கல்வியும் உணர்ச்சிகளும் (Emotions and Physical Education)

உணர்ச்சிகள் என்றால், பயம், மகிழ்ச்சி, கோபம், அன்பு, வருத்தம் போன்ற வெளிப்பாடுகள் என்று மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதையே இன்னும் ஆழமான அர்த்தத்திலும் கூறுவார்கள் மகிழ்ச்சி (joy) என்பதை ஆனந்தம் (Pleasure) என்பதாகக் கூறுவார்கள்.ஆகவே, உணர்ச்சிகள் என்பவை தெளிவானவை சாதாரண இயல்புடையவை எனவும் கருதப்படுகின்றன.

Emotion என்ற ஆங்கில வார்த்தையானது, Emyvere என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அந்த எமிவிரி என்ற கிரேக்கச் சொல்லுக்கு, இயக்கம் அல்லது அசைவு (Movement) என்பது பொருளாகும்.

ஒழுங்காக இணக்கமுறப் பணியாற்றிக் கொண்டிருக்கும் உறுப்புகளிடையே உணர்ச்சிகள் ஊடாடி நுழையும்பொழுது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றம் ஏற்படுகிறதே, அதைத்தான் அசைவு என்ற இந்தச்சொல் விளக்கிக் காட்டுகிறது.

இவ்வாறு ஏற்படுகின்ற அசைவும் இயக்கமும், எதிராக நின்று இயங்குகிற செயல்களுக்கு ஏற்ப, போராடும் பாங்கினைப் பிறப்பிக்க உதவுகின்றன என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

உணர்ச்சிகளுக்கு ஒரு விளக்கம்

உணர்ச்சிகள் என்பவை உடலில் உள்ள சுரப்பிகளிலும் மென்மையான தசைகளிலும் குறிப்பிட்ட மாற்றம்