பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

233



உடற் கல்வித் துறையின் உன்னதம்

ஒரு குழந்தையின் பலம் என்ன, பலஹீனம் எவ்வளவு என்பதை உடற்கல்வி மூலமாக எளிதில் கண்டு கொள்ள முடியும் குழந்தைகளின் பயங்கொள்ளித்தனம், தாழ்வு மனப்பான்மை, நடுக்க உணர்வு. எதற்கும் பின்வாங்கும் அச்சம், இவற்றை கண்டு கொண்டு, அவற்றை அகற்றி, ஆற்றலை வளர்க்கவும் உடற்கல்வித்துறை உதவுகிறது.

வகுப்பறைகளில் மாணவர்களின் வளத்தையும் வளர்ச்சியையும் கண்டு கொள்ள இயலும். ஆனால் விளையாட்டு மைதானங்களில், அவர்களின் எழுச்சியையும் ஏற்றமான உணர்ச்சிகளையும் இனம் கண்டு கொள்ள முடியும்.அப்படிப்பட்ட சூழ்நிலைகளே ஒருவரை உயர்ந்த லட்சியவாதியாக மாற்றுகின்றன. அவைகளே ஆதரவைத் தந்து அற்புதமான துண்டுகோலாகவும் அமைந்து உதவுகின்றன.

உளவியலும் உடற்கல்வியும்

உடற்கல்வித்துறையின் உயர்தரமான வளர்ச்சிக்கு உளவியல் கொள்கைகள் உற்சாகமாக உதவிவருகின்றன.

மனிதர்கள் நரம்புகள் தசைகளின் நன்கிணைந்த ஆக்கத்தால், உடல் உணர்வு ஒன்றுபட்ட செயலூக்கத்தால் ஆக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், அடிப்படை செயல்களின் தரமான சிறப்புகளால் தான், எதிர்பார்த்த குணங்களை எதிர்பார்க்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதுவே, உடற்கல்வியின் ஆதாரமான செயலாக விளங்குகிறது.

உடல் செயல்களுக்கு மனநிலையும் உதவியாக வேண்டும்.இல்லையேல், எதிர்பார்த்தது எதுவும் இதமாக