பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
234
உடற்கல்வி என்றால் என்ன?

நடைபெறாது என்பதால், ஏற்கக் கூடிய சில உதவும் குறிப்புகளை இங்கே காண்போம்:

1. ஒரு குழந்தையை நாம் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாத, உடலால், மனதால் உணர்வால் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற கூட்டுக் குணங்கள் கொண்டதுதான் ஒரு குழந்தைஎன்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

உடற்கல்வித் துறை செயல்களில் ஒரு குழந்தை முழுமையாக (Whole) ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் ஆற்றல் வளருகிறபோதே ஆண்மையும் ஆளுமையும் வளர்வதற்கு ஏதவாக அமையும். ஆகவே, உடல் வளர்ச்சிக்காக மனதையோ, மன வளர்ச்சிக்காக உடலையோ பறிகொடுத்துப் பாழாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. எல்லா விதமான உடற்பயிற்சி செயல்களும், விளையாட்டுக்களும் உணர்ச்சிகளை ஒன்றுபடுத்தி, உறுதிப்படுத்தி, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, ஆளுகின்ற வலிமையை வழங்குகின்றன. அப்படிப்பட்ட உடல் மனஉறுதியை உருவாக்கும். வழிவகைகளில் முனைந்து செயல்படுத்திடவேண்டும்.

3. உடலில் தோன்றுகின்ற எல்லா விதமான எதிர் செயல்களும் திடீர் செயல்களும் (Reflexes) நன்கு திறம்பட செயல்படக்கூடிய அளவில் வளர்வதால்தான், திறமைகள் மிகுதியாகின்றன. அவற்றை ஆட்படுத்துகின்ற தன்மை நரம்புகளுக்கே உண்டு. அத்தகைய நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்திவிடுவதால், இயக்கங்கள் எளிதாகின்றன. செயல்கள் செழுமை கொள்கின்றன. எனவே, குழந்தைகள் எளிதாக இயங்க, அதனை ஆட்டுவிக்கின்ற நரம்பு