பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
235
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மண்டலம் வலிமை பெற, போதுமான வாய்ப்புக்களை வழங்கிடவேண்டும்.

4.சிறப்பான கல்விமுறைக்கு, கற்பவர்களின் ஆயத்த நிலை மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளைக் கற்பதற்கு ஆயத்தப்படுத்துகிற காரியத்தை, உடற்கல்வி ஏற்று எடுப்பாகவே செய்து வருகிறது.

உடலாலும் மனதாலும் குழந்தைகளை தயார் செய்வதுடன், கற்கும் செயலில் கனிவான முன்னேற்றத்தை அளித்து, அவர்கள் எதிர்காலத்தில் தேர்ந்தவர்களாக உருவாக்கும் மேன்மையையும் கொடுக்கிறது. அப்படிப்பட்ட முன்னேற்றத்திற்குத் துண்டுகோலாக, பின்வரும் செயல்கள் துணைபுரிகின்றன.

1. பரிசுகளும் பெருமைகளும் (Awards & Rewards)

2. புகழ்சியும் பாராட்டுகளும் (Appreciation and praise)

3 கற்பிக்கும் துணைப்பொருட்களும் சிறந்த சாதனங்களும் (Better equipment and Teaching aids)

4.வகுப்பறையில் அல்லது விளையாட்டு வகுப்பில் சிறப்பான நடத்து முறை

5.ஆசிரியரின் ஆளுமை

6.சிறப்பான கற்பிக்கும் முறை

7.குழந்தைகளே நன்கு ஆர்வத்துடன் கற்றுக்கெள்ள முன் வருவது போன்ற ஆர்வம் ஊட்டும் செயல்கள்.

சிறு குறிப்பு

குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டுவது அவசியம் தான்.ஆனால், அவர்களின் சக்திக்கு மேலாக செயல்படத் தூண்டுவது தவறான அணுகு முறையாகும். அவர்களின்