பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

243


 சமூகத்தில் ஒர் அங்கமாக உட்படுத்தி, சங்கமப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட சமூக சக்தியில் குழந்தைகளும் ஆழ்ந்து விடுகின்றனர். தங்களையும் ஆட்படுத்திக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் நடத்தைகளை மதித்து ஏற்றுக் கொள்வது போல, அவர்கள் நடத்தைக்கு ஏற்ப, தங்கள் நடத்தையையும் மாற்றி அமைத்துக் கொள்ளும் முனைப்புடன் மாறிக் கொள்கின்றனர்.

ஆக, குழந்தைகளுக்கு மிக நெருங்கிய தொடர்புள்ளவர்கள், நெருக்கமானவர்கள் என்பவர்கள் குடும்பத்தினர், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், அண்டை அயலார், சுற்றத்தினர் மற்றும் பள்ளி நண்பர்கள், சக மாணவர்கள் ஆவார்கள்.

அவர்களுடன் அடிக்கடி ஏற்படுகின்ற தொடர்புகள், உறவுகள், பழக்க வழக்கங்கள் இவற்றால், மற்றவர்கள் செய்கின்ற காரியங்களை, பழக்க வழக்கங்களை, குயுக் திகளை, குதர்க்கங்களைக் கற்றுக் கொண்டு, சந்தர்ப்பங்களுக்கேற்ப சமர்த்தாக நடந்து கொள்கின்றார்கள். ஆகவே, இப்படித்தான், குழந்தைகள் ஒரு சமுதாயத்தின் சங்கமாகின்ற அங்கத்தினர்களாக மாறிக் கொள்கின்றார்கள்.

உடற்கல்வியும் சமூக அமைப்பும்

உடற் கல்வி என்பது தனியாக இருந்து கொண்டு, பயிற்சிகள் செய்கின்ற தனிப்பட்ட காரியமல்ல.

பலர் ஒன்று கூடி, ஒருங்கிணைந்து, ஒருவருக்கொருவர் உள்ளத்தாலும்,செயல்களாலும் ஒன்று கலந்து மேற்கொள்கின்ற முயற்சிகள் நிறைந்த காரியங்களாகும்.