பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

உடற்கல்வி என்றால் என்ன?


பாடு, சமநிலை போன்ற பண்புகளையும் திறமைகளையும் மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன் அவர்கள் சமூகப் பண்புகளான நோமை, இரக்கம், ஒற்றுமை, நட்பு, அன்பு, மதிப்பு, மரியாதை, விளையாட்டுப் பண்புகள் இவற்றையும் சேர்த்தே கற்றுத் தருகின்றது. ஒரு சிறந்த சமுதாய மனிதராகவே வளர்த்து விடுகிறது.

கலாசாரமும் சமூகப் பழக்க வழக்கங்களும்

கலாசாரம் என்பது ஒரு நம்பிக்கை.ஒரு பழக்கம். ஒரு மரபு. இது பழங்கால சமுதாயம் எனும் மரத்தின் ஆணி வேர்களாக ஊன்றி, சமுதாய மரத்தை செழிப்பாக மாற்றி அமைத்துக் கொண்டே வருபவையாகும்.

பழைய பண்பாடுகளை வளர்த்துக்கொண்டே,புதிய சமுதாய அமைப்புக்கு புத்துணர்ச்சி ஊட்டி, புதிய மக்கள் கூட்டத்தையும் அதே உணர்வுகளுடன் அமைப்புக்களுடன் வாழ்விக்கின்ற சூழலையே கலாசாரம் செய்து தருகிறது என்று கூறுகின்றனர்.

ஒரு சமுதாயப் புணரமைப்பிலே, பல்வேறு விதமான கலசாரங்களை நம்மால் காணமுடிகின்றது.அந்த சமுதாய அமைப்பில், பல்வேறு விதமான பழக்க வழக்கங்களை, நடைமுறைகளையும் நாம் காண்கிறோம்.

ஆனால், அந்த சமூக அமைப்பில் உள்ள பழக்க வழக்கங்கள் அத்தனையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஆய்ந்து தேர்ந்தெடுக்கும் முறையில், நல்ல பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை தந்தும், மற்றவற்றை நீக்கி