பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

247


யும், தெரிவு செய்து, இவை எல்லா சமுதாயத்திற்கும் ஏற்றவைகள் என்றும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இப்படியாகத்தான், எல்லா சமுதாயத்தினருக்கும் ஏற்றாற்போல, உலக அரங்கம் ஒப்புக் கொள்வதுபோல், ஒரு சில பழக்கவழக்கப் பண்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் சமுதாய மரபுகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதனால்தான், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு தேசத்திற்கும் என்று மரபுகள்; பண்பாடுகள்; உருவாகியிருக்கின்றன.

வழிவழியாக வருகின்ற இந்த மரபுகளை, புதிய மக்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வதையே கலாசாரம் என்கிறோம்.

குழந்தை ஒன்று, தான் வளர்ந்து வருகிறபோதே தான் வாழ்கிற சமுதாயத்தின் மக்களைப் பார்க்கிறது. அவர்கள் நடைமுறையை மனதில் பதித்துக் கொண்டு தானும் நடந்துகொள்ள முயற்சிக்கிறது.

இவ்வாறு வளர்கின்ற குழந்தைகள், சில மரபுகள் துன்பமாக அமைந்திருப்பதையும், சில மரபுகள் இன்பமாக இருப்பதையும் அறிந்துகொண்டு, அதன் வழியே இணங்கி வாழும் மனப்பக்குவத்தைப் பெற்றுக் கொண்டு விடுகின்றனர்.

ஆகவே, இங்கே நாம் குறிப்பை அறிந்து கொள்வோம். கலாசாரம் என்பது, ஏற்கனவே வாழ்ந்து சென்ற முந்தைய சமூக மக்கள் நம்பி ஏற்றுக் கொண்டு நடந்து வந்த நம்பிக்கை நிறைந்த பண்பாடுகளை, புதிய