பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.3. உடற்கல்வி என்றால் என்ன?


பொதுக்கல்வி - உடற்கல்வி

உடற்கல்வி என்பது உடலுக்கான கல்வி, உடல் மூலமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி, உடல் நலம், பலம், வளம் என்பதையே குறிப்பாகக் கொண்டு கற்பிக்கும் கல்வி.

உடலுக்காகத் தானே கல்வி என்று, Physical என்று ஆங்கிலச் சொல்லை சுட்டிக் காட்டித் தரம் தாழ்த்திப் பேசுபவர்கள் உண்டு.

உடல் தான் உலக வாழ்க்கைக்கு ஆதாரம் உடலுக்கு உள்ளேதான் உள்ளம் (mind) இருக்கிறது. ஆத்மாவும் (Spirit) அங்கேதான் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

நல்ல தரமான, நலமான, பொலிவான, வலிவான உடல் இருந்தால் தான், தரமான, திறமான, தன்மையான மனம் வளர வாய்ப்புண்டு. அதனால் தான் நல்ல உடலில் நல்ல மனம் (A Sound mind in a sound Body) என்ற கொள்கையை முற்கால மக்கள் முக்கியமான, கொள்கையாகக் கொண்டிருந்தார்கள்.