பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

உடற்கல்வி என்றால் என்ன?


சமுதாயமாக இருக்கும் புதிய ஜனங்களுக்குள் கொண்டுவந்து, பழக்கமாக, வாழ்க்கையாக ஆக்கிவிடுகின்ற அமைப்புக்கே இப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.

உடற்கல்வியும் கலாசாரமும்

உடற்கல்வியும் எந்த இடத்தில் இடம் பெறமுனைகிறதோ, அந்த இடத்தின் கலாசாரத்தை அறிந்து, அதன் கொள்கைக்கும் நடைமுறைக்கும் ஏற்ப அனுசரித்துக் கொண்டு பாடத்திட்டங்களை வகுத்துப் பயிற்சியளிக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தின் கலாசாரங்களைப் புரிந்து கொள்ளாமல், உடற்கல்வி கறிப்பிக்கப்படுகிறபோது, உடற்கல்வியும் எடுபடாது. அந்தக் கலாசார அமைப்பும் குளறுபடியாகி விடும்.நாகரிகமும் நசுங்கிப் போய்விடும்.

பழங்கால மரபுகள், பழக்க வழக்கங்கள் இன்னும் பின்னாளிலும் பின்பற்றப்படுகிற முறைகளுக்கு ஒர் உதாரணம் காண்போம்.

பழங்கால வீரர்களும் போராளிகளும் பழகிவந்த யுத்தங்கள், தந்திர முறைகளும், இன்று நவீன காலத்திலும் பின்பற்றப்படுகின்ற தன்மைகளை அறிந்து தெளிக.

இன்றைய நவீன உடற்பயிற்சி முறைகளும், முற்காலத்தில் போர்முறைகள்,போராட்டவழிகள்,போராயுதங்களைக் கையாண்ட வழிமுறைகள் இவற்றின் அடித்தளம் கொண்டே அமைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பிரிட்டன் அமெரிக்க நாட்டின் போர் முறைகள், வாழ்க்கை முறைகள் சமுதாய சூழ்நிலைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால்,