பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
254
உடற்கல்வி என்றால் என்ன?

சமூக ஒற்றுமை என்பது மக்களை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்ட கூட்டுறவோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள்வதுதான்.

மக்களிடம் ஒற்றுமை வேண்டும் என்கிறபோது, செயலில் போட்டி, தொழிலில் போட்டி, வாழ்க்கை முன்னேற்றத்தில் போட்டி என்ற பல சூழ்நிலைகளின் பெருக்கம் ஏற்படத்தான் ஏற்படும்.

அப்படிப்பட்டப் போட்டிகள் விதிகளுக்குட்பட்ட, ஒரு நியதி முறைக்குட்பட்ட மற்றவர்களும் மனமாறப் பின்பற்றுகிற தரமான வழிகளிலே ஏற்பட வேண்டும். அமைதியான சூழ்நிலைகளிலே அத்தகைய போட்டிகள் முடிவு பெறுவதாகவும் இருக்க வேண்டும். ஒற்றுமை இல்லாமல் ஒரு சமூகமானது முன்னேறுவது என்பது, முடவன் மலையேறும் முயற்சி போல்தான் அமையும்.

போட்டியும் விளையாட்டும்

தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு வாழ்க்கைச் சூழலிலும்,போட்டிகளே பெருவாரியாக இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. போட்டிகளும் தனியார்களுக்கிடையில் நாடுகள், அரசியல் அமைப்புகள், இனங்கள், இவைகளுக்கிடையில், எல்லையில்லாத அளவில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்க்னிற்ன.

“ஒற்றுமையும் போட்டிகளும் மனித இனத்திற்குரிய மகிமை மிக்க உரிமையாக விளங்குகின்றன. அந்த உரிமைகளை அழுத்தநினைப்பதும்,அழிக்கநினைப்பதும் முடியாத காரியம். ஏனென்றால் அந்த அழிவு வேலை, தனிப்பட்டமனிதர்களையும் அழித்த பிறகுதான் முடியும்” என்று பெர்ட்ரண்ட் ரசல் என்ற மேனாட்டறிஞர் பேசுகின்றார்.