பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
257
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பண்பாடுகளுக்குப் பரிட்சையாகவும் அவைகள் அமைந்து விடுகின்றன.

குழந்தைகளும் போட்டியும்

குழந்தைகளுக்குப் போட்டிகள் என்பவை குதூகலம் அளிப்பனவாகும். மற்றவர்கள் கூடி உறவாடி, ஒன்று சேர்ந்து செயல் புரிவதானது சிந்தையின் சீர்மையை சிறப்புற வளர்த்து விடுவதாகும்.

போட்டிகளைக் கட்டாயப்படுத்தியும், அவற்றில் வென்றுதான் ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்ளச் செய்வதும் குழந்தைகளைக் கஷ்டப்படுத்தி விடும். வெற்றியைப் பெற்றுத்தான் தீரவேண்டும் என்று அவர்கள் தலையில் சுமத்தி விட்டால், அவர்களுக்கு அது தீராத சுமையாகிவிடும். மாறாத வேதனையாகிவிடும்.

குழந்தைகளுக்கு அது மனச்சுமையாகி, மனபடபடப்பு, மனச்சலனம், முதலியவற்றை ஏற்படுத்தி, துன்பத்தை அதிகப்படுத்தி விடுவதால்,அவர்கள் நடத்தைகளிலே நலிவு தோன்றத் தொடங்கிவிடும். அவர்கள் தோரணையும் தளர்ந்துபோகும்.

போட்டிகள் என்பது, தனிப்பட்டவரின் ஆர்வத்தினால் பொருதும் ஆசையாக மாறவேண்டும். அவர்கள் ஆர்வத்தைத் துண்டுவது போல சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் வளர்த்துக் கொள்கிற போட்டி மனப்பான்மை, அவர்களுக்கு நல்ல பலன்களை அளிப்பனவாக விளங்க வேண்டும்.

போட்டிக் குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதங்களில் கூட, குழந்தைகள் பாதிக்கப்படுகின்ற பரிதாபத்துக்கு ஆளாகி விடுகின்றார்கள். போட்டிகளில் யார்