பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
258
உடற்கல்வி என்றால் என்ன?

பங்கேற்பது என்பதற்காகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

வாய்ப்பை இழப்பவர்கள், தாழ்வு மனப்பான்மை அடைகின்றனர். தங்களுக்குள்ளேயே எண்ணி எண்ணி, குமைந்து தாழ்ந்து போகின்றனர். ஆற்றலில் தணிந்து வேகின்றனர். அதனால் அவர்களுக்கு மனத்திற்குள்ளே வெறுப்பும், பசப்பும், கசப்பும் ஏற்பட்டு விடுகின்றது. இவையே பின்னாளில், பெரும் சமூகப் பிரச்சினைகளாக வடிவெடுத்துக் கொள்கின்றன. இப்படி நேராமல் பாதுகாக்க, குடியரசுக் கொள்கையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்துவம் போன்ற முறைகளில் தேர்வு செய்வது, சாலச்சிறந்த வழியாகும்.

சமூக மரபுகளையும், சமாதான வழிகளில் போட்டியிடுவதையும் சிறப்பாக வளர்க்கின்ற சந்தர்ப்பங்கள் உடற்கல்வித் துறையில் நிறைய இருக்கின்றன. உலக சமாதானத்தை உண்டுபண்ணுகிற அளவுக்கு, உடற்கல்வித் துறை வலிமை வாய்ந்த சாதனமாக விளங்குகிறது.

விதிகளுக்கடங்கிய முறையான ஆட்டம் (Fair Play) விளையாட்டுப் பெருந்தன்மைப்பண்புகள் போன்றவற்றை ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் உடற்கல்வி விதைத்து விடுகிறது. விளைந்து வருகிற விளைச்சலோ வலிமை வாய்ந்த சமுதாயம். வக்ரம் இல்லாத போராட்டப் போட்டிகள். நலமான முடிவுகள். நல்ல சூழ்நிலைகளை நிரப்புகிற நயமான அணுகு முறைகள். சந்தோஷமான சமுதாயச் சூழல் தோன்ற ஏதுவாகின்றன.

மனித உணர்வுகளுக்கு மதிப்பும், தனிப்பட்டவர்களுக்கு வாய்ப்பும், ஒன்று கூடுகிறபொழுது தனக்குள்ள