பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
272
உடற்கல்வி என்றால் என்ன?எந்த ஒரு ஆசிரியரும் ஒரே நாளில், உன்னதமான தலைவராக ஆகிவிட முடியாது. அவர்கள் நிறைய பயிற்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். தொழில் முறையான அனுபவங்களைத் தேர்ச்சியால் பெற்றிருக்க வேண்டும்.இதுபோன்ற இனிய நிலை எப்பொழுது வரும் என்றால், தனிப்பட்ட ஒருவரின் தணியாத முனைப்பு இருந்தால் தான் முடியும்.

தலைவருக்குரிய தகுதிகள்

ஒருவர் தலைவராக இருக்கிறார் என்றால், அவருக்கு இரண்டு யோக்கிதாம்சங்கள் இருக்க வேண்டும்.

ஒன்று, அவர் தான் தலைமையேற்றிருக்கும் இடத்தில், தகுந்தவர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில் இருக்க வேண்டும்.இரண்டு தன்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நல்ல முன்னேற்றம் பெற வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு நிறைந்தவராக இருக்கவேண்டும். தனக்குரிய பணிகளை, தூய்மையான பணி என்று தூய்மையாக நினைத்து, துணிவுடன் நிறைவேற்றுகின்றதன்மையும், அதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற ஆர்வமும் உடையவராக, உடற்கல்வித் தலைவர் எனப்படுகிறவர் இருக்க வேண்டும்.

தலைவருக்குரிய தகுதிகளைப் பற்றி நாம் விளக்க வேண்டும் என்றால், அவற்றைக் குறிப்பிட்டு, இன்னது தான், இப்படித்தான் என்பதாகக் கூறிவிட முடியாது. தகுதிகள் என்பது துறைக்குத் துறை, சூழலுக்குச் சூழல்; தொழிலுக்குத் தொழில் வேறுபடுவது உண்டு.

எப்படியிருந்தாலும்,செய்யக் கூறி, வழிமுறைகளைக் காட்டி, நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய திறமைகளே தலைவருக்கு உரியவை என்றால், அவற்றிற்கும் ஒரு சில