பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

275


வெற்றிமட்டுமல்ல. வருங்காலத்தில் கெளரவமும் பாராட்டும், வாசலில் வந்து காத்து நிற்குமே!

இதை எண்ணிப் பார்த்து, உடற்கல்வி ஆசிரியர்களும், சிறப்புப்பயிற்சியாளர்களும், அணித்தலைவர்களும் மேற்கொள்கிற செயல்களில், அதிகமான பொறுப்பேற்றுக் கொண்டு, கஷ்டமான காரியங்களைக் கூட மாணவர்கள் எளிதாகச் செய்யும் வண்ணம் கற்பித்திட வேண்டும். கருத்துடன் வழிநடத்திடவேண்டும். தாங்கள் பின்பற்றுபவர்களை சாமர்த்தியசாலிகளாக்கும் கடமையல்லவா அவர்களுடையது!

3.சுறுசுறுப்பும் கற்பனையும்

செயல்கள் செய்யும்போது, கற்பனைச் செறிவும், முன்னறிவும் மட்டும் போதாது. நல்ல சுறுசுறுப்பும் வேண்டும். இந்த சிறந்த குணங்கள்தாம், ஒருவரை மற்ற மனிதர்களிடமிருந்து தனியே வேறுபடுத்திக் காட்டுகின்றது.

சுறுசுறுப்பான மூளை, மற்றவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி விரிவாக சிந்திக்கிறது . விரைவாகவும் விவேகமாகவும் சிந்திக்கிறது. ‘சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை’ என்று கூறுவதை இங்கே நினைவு கூர்வோம்.

சுறுசுறுப்பான மூளை மற்றவர்களையும் சிறப்பாக செயல்படும் வகையில் உற்சாகப்படுத்துகிறது. சிக்கலான பிரச்சினைகளில் சிறப்பான முடிவெடுத்து விடுவிக்கிறது.தீர்த்துவைக்கிறது.

கொஞ்சம் மந்தத்தனமாகவும் கலைந்து போகிறச மன ஆர்வம் உடையவர்கள், கணக்காகக் காரியமாற்ற