பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
283
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா3. அல்லது சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்கலாம்.

4. அல்லது, திறமையுள்ள மாணவர்களுக்கு, வாய்ப்பளிக்கலாம். ஒருவர் மாற்றி ஒருவர் என்ற வரிசையில்.

5. அல்லது அதிகத் திறமையுள்ளவராகப் பார்த்து, தலைமை ஏற்கச் செய்யலாம்.

சூழ்நிலை அறிந்து, தக்க முறைகளைப் பின்பற்றி, அக்கறையுடன் ஆராய்ந்து,தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்தபின், தலைமைக்குரிய தகுதிகள், வரம்புகள், வாய்ப்புகள், செயல்படும் நெறிகள், பக்குவமான வழிகள் இவற்றை அவர்களுக்கு விளக்கிக் கூறி வழிகாட்டவேண்டும்.

உடற்கல்வி வகுப்புகளில், மாணவர் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றார்கள். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

1. ஒரு குழுவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல;

2. பயிற்சி வகுப்புகளைக் கற்றுத்தர; மேற்பார்வையிட்டுப் பார்த்துக் கொள்ள.

3. ஒரு குழுவை வழி நடத்திச் செல்லும் பொறுப்பேற்க.

4. சுற்றுலா, நடைப் பயணம், போன்ற சமயங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் பற்றி பொறுப்பேற்க.

5. போட்டிகள் நடத்துகிற சமயங்களில், போட்டிகள் நடத்த பொது மக்களுக்கு வழிகாட்ட, இருக்கைகள் சரி செய்து போட, விளையாட்டு வீரர்களுக்கு வேண்டியன தந்து உதவ.