பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

உடற்கல்வி என்றால் என்ன?



6. விளையாட்டுப் பந்தயங்கள் நடத்துகிறபோது, அதிகாரிகளாக, அலுவலர்களாக, தொண்டர்களாக பணியாற்ற.

7. சிறு சிறு விளையாட்டுக்களை நடத்துகிறபோது சேர்ந்து உதவ.

8. குழுக்களுக்குத் தேநீர் அளிக்கின்றபோது உதவ.

இவ்வாறு மாணவர்கள் பொறுப்பேற்றுத் தலைவர்களாக செயல்பட வழிகள் உள்ளன. அவர்களை ஆற்றுப்படுத்தி, அக்கறையுடன் செயல்பட ஊக்குவித்தால், அரிய பயன்களைப் பெற முடியும்.

உடற்கல்வி - ஒரு தொழில்

உடற்கல்வி என்பது ஒர் உன்னதமான தொழில் (Profession) தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்துகின்ற தொழில்நுணுக்கம் நிறைந்த துறை.

தொழில் என்றால் அதற்கென்று விஞ்ஞான பூர்வமானதேர்ந்த உண்மைகள் உண்டு.அவற்றை அடைய அறிவுபூர்வமான அணுகுமுறைகள் உண்டு. ஆற்றல்கள், திறன்கள், திறமைகள், வழிகள், வரைமுறைப்படுத்தும் விதிகள் என்றெல்லாம் நிறைய உண்டு.

வியாபாரத்திற்கு விளக்கம்

உடற்கல்வித் துறை என்றால் அது ஒரு வியாபாரம் (Trade) என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அது தவறு.வியாபரம் செய்பவர்கள் வியாபாரிகள் அவர்களுக்கு படிப்பறிவு அவசியமில்லை. அனுபவ அறிவே போதும். திறன் நுணுக்கங்கள் (Techniques) தேவையில்லை. திறமைகளே போதும். ஆளைப்பார்த்து