பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/287

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
285
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பொருளை விற்கின்ற சாமர்த்தியம் தேவை.நிலையான விதிகளோ, நியாய வழிகளோ வியாபாரத்திற்கு வேண்டாம்.

பொது மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற பொறுப்புணர்வு குறைவு, தங்கள் லாபத்திற்காக, பொது மக்களுக்கு உதவுவது போன்ற பாவனைகள் வியாபாரிகளிடம் அதிகம் இருக்கிறது. வியாபாரத்தில் வருமானத்திற்கும், லாபம் சம்பாதிக்கவும் என்ற தன் முனைப்பே அதிகம்.

ஆகவே, உடற்கல்வித்துறையைப் போய் வியாபாரம் என்று யாராவது கூறினால், அது பொய் முழக்கமே தவிர, வேறல்ல.

தொழிலுக்கு விளக்கம்

தொழில் என்றால் அதற்கு விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

விஞ்ஞான பூர்வமான கருத்துக்களின் தொகுப்பாகவும் அந்தத் தொழில் ஆக்கப்பட்டிருக்கவேண்டும்.

அடிக்கடி ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் அது ஆட்படவேண்டும்.

அதன் நுணுக்கங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் விஞ்ஞானமயமாக விளங்க வேண்டும்.

சமூக வளத்திற்காகவும், தொழில் என்பது உதவுவதாக விளங்க வேண்டும்.

ஈடுபடுகின்றவர்களுக்கு இணையற்ற பயன்களை அளிக்கும் வல்லமையுடன் விளங்க வேண்டும்.

உடற்கல்வி ஒரு தொழில் என்றால், கீழ்க்கானும் காரணங்களை நீங்கள் படிக்கிறபோதே, உணர்ந்து கொள்கிறீர்கள். ஒத்துக் கொள்வீர்கள்.