பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
286
உடற்கல்வி என்றால் என்ன?1. உடற்கல்வியின் அடிப்படைக் கருத்துக்களும் கொள்கைகளும் பல விஞ்ஞானங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறாகும்.

2. உடலியல், உடற்கூறு நூல், உயிரியல், சமூக இயல், விளங்கியல், உயிர் வரலாறு நூல் போன்ற பல விஞ்ஞானங்களின் மேன்மை மிகு கருத்துக்களின் தொகுப்பே உடற்கல்வியாகும்.

3. எல்லா கொள்கைகளுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் மேன்மைமிகு நோக்கத்தையே முனைப்பாகக் கொண்டுள்ளன.

4. சமுதாய அமைப்பில், தனிப்பட்டவர்கள் எவ்வாறு இணங்கி, இணைந்து செயல்பட்டு, செழிப்புக்கு உதவ வேண்டும் என்று உடற்கல்வி கற்றுத்தருகிறது.செயல்பாட்டில் ஈடுபடுத்தி, அனுபவப்படுத்துகிறது.

5. மக்களுக்கு நன்னடையும், நன்னடத்தைகளையும் கற்றுத் தருகிறது.

6. கலை உணர்வும், விஞ்ஞான அறிவும் மேம்பட துணைபுரிகிறது.

7. மனித சமுதாயத்தின் மகிமை மிக்கப் பண்பாடுகளை வளர்க்கும் மாபெரும் பணியில் உடற்கல்வி ஒரு தொழிலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.

தொழில் - தொழிலர்

ஒரு மனிதர் ஒரே நாளில் தொழிலராக (Professional) மாறி விட முடியாது. அவர் நீண்ட நாள் இருந்து, பழகி பயிற்சி பெற்று, பக்குவம் அடைகிற போதுதான், அந்த நிலையை அடைய முடிகிறது.

அவர் அந்தக் குறிப்பிட்ட தொழில் அறிவைக் கற்க வேண்டும். அந்த அறிவுக்கேற்ற திறன்களை வளர்க்க