பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

287


வேண்டும். அதையே முனைப்பாகக் கொண்டு உழைக்க வேண்டும். இதற்கு பல மாதங்கள் ஆகலாம். பல ஆண்டுகள் கூட போகலாம்.

தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, பணியாற்றுகிறவர்களே சிறந்த தொழிலர்களாக மாறிவிட முடியும். உதாரணமாக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் ஒரே நாளில் நிபுணத்துவம் பெறமுடியாது. சிறந்த செயல்படுபவராகவும் ஆகமுடியாது. தொடர்ந்த, நீடித்த, தேர்ச்சியான பயிற்சிகள் வேண்டும் அதுபோலவே, உடற்கல்வித் துறை முழுவதும் ஒருமித்த உள்ளத்துடன் மேற்கொள்கிற ஈடுபாடுகளினால் தான் உயர்ந்து நிற்க உதவுகிறது.

தேர்ந்த திறன்கள் (Skills) என்பவை ஒரே நாளில் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. அவை காலங்காலமாக, கற்றோராலும் மற்றோராலும் கற்பனை நயத்துடன், அனுபவச் செழிப்புடன் உருவாக்கப்பட்டவையாகும். ஆகவே, வெறும் அறிவாற்றல் மட்டும் உடற்கல்வித் தொழிலுக்குப் போதாது. வீறுமிக்க செயல் திறன்களும் வேண்டும் என்பதையே உடற்கல்வித் தொழில் வற்புறுத்துகிறது.

உடற்கல்வித் தொழில் அதிகம் வற்புறுத்துவது தியாக மனப்பான்மை நிறைந்த சேவைகளைத்தான் (Service). இது சமுதாயச் செழுமையை வளப்படுத்தவே வற்புறுத்துகிறது. உடற்கல்வி இருக்கிறது. சேவை மனப்பாங்குள்ள ஆசிரியர்களே, சிறந்த தொழிலராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள்.

உடற்கல்வித்துறை சிறந்த தொழில் என்று மதிக்கப் படுவதற்குக் காரணம், அதுநாளுக்கு நாள் நொடிக்கு