பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

உடற்கல்வி என்றால் என்ன?


நொடி நுண்மையாக மாறிக் கொண்டு வருவது தான். தொழிலில் மாற்றம் நிகழ வேண்டும். அதில் ஆய்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டும் என்ற நியதிப்படி உடற்கல்வித் துறை அடிக்கடி ஆய்வுக்கு ஆளாகிறது. ஆராய்ச்சிகள் அகில உலக அளவில் நடைபெறுகின்றன. உணர்வுகளால், அறிவுச்சூழல்களால் உடற்கல்வித்துறை உயர்ந்த தொழிலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களை நல்லவர்களாக, ஒழுக்க சீலர்களாக மாற்ற முனையும் உடற்கல்வியின் மாண்புகளே, அதனை அனைவருக்கும் ஏற்ற தொழில் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய பெருமதிப்பினால் தான், உடற்கல்வியை உலகம் ஒரு ஒப்பற்றத் தொழிலாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்விக் கல்லூரி தான் முதன் முதலாகப் பயிற்சிக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.1947 வரை 5 கல்லூரிகளே இந்தியாவில் இருந்தன. இன்று 100 எண்ணிக்கையை எட்டும் அளவில், கல்லூரிகளில் எண்ணிக்கை மிகுந்து விட்டன. காரணம் உடற்கல்வியை உதவும் கல்வியாக உலகம் ஏற்றுக் கொண்ட காரணத்தால்தான்.

உலக நாடுகளுக்கும் இணையாக, நம்நாட்டு உடற்கல்வி உயர்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், தங்களையும் தரத்திலும் திறத்திலும் உயர்த்திக் கொண்டு, வருவோரையும் உயர்த்தும் தொண்டில் ஈடுபட்டு, உலகம் போற்றும் உடற்கல்வியாளராக சிறக்க விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்!