பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

35
இப்பொழுது Sports என்று சொன்னால், விளையாட்டுத்துறையில் எல்லாவற்றையும் குறிக்கின்ற சொல்லாகவே விரிவு பெற்றிருக்கின்றது.

அதாவது, விளையாட்டுக்கள், (Games); ஒடுகளப் போட்டிகள் (Athletics) நீச்சல் போன்றவற்றையும் பொழுது போக்கும் அம்சங்களையும் (Recreation) குறிப்பனவாக அமைந்துள்ளது.

ஆனால் நமது நாட்டில் ஸ்போர்ட்ஸ் என்றால் ஒடுகளப் போட்டிகளையே குறிக்கிறது. இங்கிலாந்தில் இதனை (Athletics) என்றும், ஒலிம்பிக் பந்தயங்களில் (Track and Field) என்றும் அழைக்கின்றார்கள்.

ஸ்போர்ட்ஸ் என்ற சொல் எப்பொழுதும் தனியார் பங்குபெறுகிற தனித்திறன் போட்டிகளையே குறித்துக் காட்டுகின்றது.

விளையாட்டுக்கள் என்பவை பலர் ஒன்று கூடி சார்ந்து விளையாடுகிற “குழு ஆட்டங்களாகும்.” இந்த விளையாட்டில் ஈடுபடுகிற உடல் இயக்கங்கள் எல்லாம் நொடிக்கு நொடி மாறுபடுகின்றனவாக, எதிர் நின்று ஆடுகின்றவர்களை ஏய்த்து சமாளித்து வெற்றி பெறுவதற்காக உள்ள திறமையான இயக்கங்களாகவே அமைந் திருக்கின்றன.

6. உடல் நலக்கல்வி (Health Education)

உடல் நலம் பற்றி விளக்கிக் கூறுவது உடல் நலக்கல்வியாகும்.

உடல் நலம் என்பதை விளக்கவந்த ‘உலக உடல்நல கழகம், ஒன்று இப்படியாக விளக்கம் கூறுகிறது “உடல் நலம் என்பது உடலால், மனதால், சமூக வாழ்வில் மிக