பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

397. பொழுது போக்கு (Recreation)

பொழுது போக்கு என்பது மனமும் உடலும் சாேர்ந்து போன நிலையிலிருந்து விரைந்து வெளிப்பட்டு வந்து, மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும், மனதிருப்தியும், துன்பத்திலும் ஒரு சந்தோஷ உணர்வு பெறவும் கூடிய வாய்ப்புக்களை வழங்குவதாகும்.

பொழுது போக்கு அம்சங்கள் வாழ்வின் பிரதான பகுதிகளாகும் பொழுது போக்கற்ற வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமே இல்லை. அது பிரயோஜனம் இல்லாத சவ வாழ்க்கை போன்றதாகும்.

நவீன காலம் நாகரீகம் நிறைந்த காலம் போட்டி மிகுந்த காலம் வாழ்வில் ஒருவர் முன்னேற பலவிதமான தடைகளை வென்று, பகைகளைக் களைந்து, பக்குவமாக மேலேறிச் செல்ல வேண்டும். அதற்கான உடல் பலமும், மனோபலமும் அவசியத்திலும் அவசியமானதாகும்.

வாழ்வில் ஏற்படும் சோதனைகளும் வேதனைகளும் ஒருவரைக் களைத்துப்போக வைக்கின்றன. தளர்ந்து போகச் செய்கின்றன. உடல் சக்தியையும் இழந்து போக வைக்கின்றன.

களைப்பிலிருந்து மீண்டு வரவும், இழந்து போன சக்தியை திரும்பப் பெறவும், விரைந்து மகிழ்ச்சியான மனோநிலையை அடையவும் பொழுதுபோக்கு அம்சங்கள் துணைபுரிகின்றன.

விளையாட்டு, இசை, முகாம் வாழ்க்கை, நீண்ட நடைப் பயணம், மெல்ல நடை பயிலுதல், நுண்கலைகள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களாகும்.

உடல் இயக்கம் தருகின்ற விளையாட்டுக்கள் யாவும் எல்லா வகை மனிதர்களுக்கும் பூரிப்பையும், புத்துணர்ச்