பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உடற்கல்வி என்றால் என்ன?


 சியையும் வழங்குவதால், விளையாட்டுக்களை சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் மேற்கொண்டு, பயன் பெறலாம்.

இனி, பொழுதுபோக்குகள் பற்றி இன்னும் சற்றுத் தெளிவாக இங்கே தெரிந்து கொள்வோம்.

ஒய்வு நேரத்தில், பயனுள்ள ஒரு காரியத்தில், சமூகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களில் ஏதாவது ஒன்றில், மகிழ்ச்சியாக ஈடுபட்டு மன நிறைவு பெறும் செயலையே பொழுது போக்குகள் என்று கூறுகின்றார்கள்.

பொழுதுபோக்குக் காரியம் என்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டும் ஏற்படுத்துவது அல்ல. மறுமலர்ச்சியையும் உண்டாக்குவது தான்.

பொழுதுபோக்கு செயல்களை உள்ளாடும் அரங்கம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றில் செய்தல், என்று பிரித்துக் கூறுவார்கள்.

இவ்வாறு விருப்பமுள்ள காரியங்களிலும், விளையாட்டுக்களிலும் பொழுதைப் போக்கும் போது, விறைப்பான மனோநிலையிலிருந்து விடுபடுவது, குதூகலம் அளிப்பது, உல்லாசமாகக் காலம் செல்வது, போன்ற பயன்களை அளிக்கின்றன.

இப்படிப்பட்ட செயல்களிலே கலை, கைத்தொழில்கள், இசை, சுற்றுலா பயணம், நடை, முகாம் வாழ்க்கை, பொழுது போக்கிகள், (Hobbies) இயற்கை சூழ்நிலை, விளையாட்டுக்கள் முதலியவைகளும் அடங்கும்.

உண்பது,உடுப்பதுபோன்ற மனிதரது அடிப்படைத் தேவைகள் போல, பொழுது போக்கு அம்சங்களும்