பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
உடற்கல்வி என்றால் என்ன?


3. உணர்ச்சி வயப்படும் பொழுதுபோக்குகள் : (Emotional Recreation)

சினிமா நாடகம் போன்றவற்றை மிக ஆர்வமுடன் பார்க்கும் போதும், புத்தகங்கள் படிக்கும் போதும் ஏற்படுகின்ற உணர்வுகளிடையே, பொழுதுசெல்லுதல் இதன் தனிச்சிறப்பம்சமாகும்.

4. செயலற்ற பொழுதுபோக்குகள் : (Passive Recreation)

ஏதாவது ஒரு விளையாட்டையோ அல்லது சினிமா நாடகம் போன்றவற்றையோ பார்த்துக் கொண்டிருத்தல்.

5. அழிவுநிலை பொழுதுபோக்குகள் : (Sub-Zero Recreation)

சூதாட்டம் போன்ற செயல்கள், மதுபானம் அருந்துதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

பொழுதுபோக்குகள் கட்டாயப்படுத்தப்படுபவை அல்ல. வாழ்வின் மந்தமான நேரத்தை மாற்றியமைக்கும் விருப்பமான காரியங்களாகும்.

வாழ்க்கையின் அன்றாட பணிகளிலிருந்து விலகிப் போவது போன்ற செயலல்ல இது. கல்வி போல பயனுள்ள உதவியாகவே பொழுது போக்குகள் மனிதர்களிடையே இடம்பெற்று விளங்குகின்றன.

ஆகவே, மனிதர்களின் அடிப்படை உரிமையாக, அவசியமாக, தேவையாக பொழுது போக்குகள் இருக்கின்றன.