பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உடற்கல்வி என்றால் என்ன?


இலக்கினை எய்திடும் இனிய உற்சாகத்தை வழங்குகின்றன.

வாழ்வில் சிறந்ததை எய்திட வேண்டும் என்று எண்ணி முடிவு செய்த இலக்கு (Goal)தான் ஒருவரின் உன்னதமான நோக்கமாக (Aim) அமைந்து விடுகிறது.

இலட்சியம் நிறைந்த இலக்கினை அமைத்து அதனை அடைய முயற்சிப்பது தான் கல்வியின் நோக்கமாகும். உடற்கல்வியின் நோக்கமானது உடல் மூலமாகக் கற்றுத் தருவதுதான்.

சில நோக்கங்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம். ஒரு சில இலக்குகளை அடைவது கடினமானதாக இருக்கும்.

இதிலிருந்து ஒரு குறிப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.


நோக்கம் (Aim) என்பது ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைவதற்காக மேற்கொள்கிற முயற்சியின் முற்றுகை அல்ல. அது ஒரு இலட்சியத்தின் பிரதிபலிப்பாகும்.

நோக்கத்திற்கு ஒரு விளக்கம்:

நாம் முயன்று அடைய வேண்டிய ஒரு உயர்ந்த முடிவினை நோக்கி, முனைப்புடன் நடக்கத் துண்டும் ஊக்குவிப்பின் மறு வடிவம் தான் நோக்கம் என்பதாகும்.

அந்த நோக்கம், என்றும் நீங்கிப்போகாத நிழலைப் போன்றதாகும். நேரம் வரும்போது விரைந்து வந்து முன்னால் நின்று, முனைப்பைக் காட்ட வற்புறுத்தி வழிகாட்டும் வல்லமை வாய்ந்ததாகும். வெற்றிகரமாக செயல்புரியும் விவேகமான யுக்திகளை உருவாக்கித் தரும்