பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 ஒப்பற்ற முறையில் ஒழுங்காக நடைமுறைப் படுத்திட வேண்டும். விளையாட்டுக்களையும் பண்பான முறையில் கற்பித்திட வேண்டும்.

நல்ல பல ஆட்டக்காரர்கள் சேர்ந்தது ஒரு திறமையான குழு என்பதாகும். அதுபோல சிறந்த பல குடிமக்கள் சேர்ந்ததுதான் ஒரு சிறப்பான சமுதாயம், செம்மையான தேசம் என்பதாக மாறும்.

அப்படி அமைகின்ற நாடு தான், எல்லா எதிர்ப்புகளையும் தகர்த்து, எதிர் நீச்சல் போட்டு, எதிர் பார்க்கும் இனிய லட்சிய வாழ்வினைப் பெற முடியும். அந்த அரிய முயற்சியில் தோற்றுப் போனாலும், மீண்டும் முயற்சியுடன் எழுந்து, போராடி, செயல் மேற்கொண்டு, செழுமையான வெற்றியையும் எய்திட முடியும்.

உறுதியும், உழைப்பும், சோர்ந்து போகாத உழைக்கும் ஆற்றலும் வெற்றியையே நல்கும். அப்படிப்பட்ட அருமையான ஆற்றல் நிறைந்த குடிமக்களை உருவாக்குவது தான் உடற்கல்வியின் உன்னத நோக்கமாக அமைந்திருக்கிறது.

உடற்கல்வியின் குறிக்கோள் :

நோக்கம் என்பது ஒரு நீண்டகாலத் திட்டம் போன்றது.அனைவருக்கும் பொதுவானது இதமானது.

ஆனால், குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்க வழிகளைப் பின்பற்றி, உடனடியாக வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதாகும்.

உடற்கல்வியின் மூலம் உடனடியாக அடையத்தக்கப் பயன்கள் என்ன என்பதை உடற்கல்வி ஆசிரியர்கள் புரிந்து கொள்வது, சிறந்த பயன்களை நல்கும். இதனால்