பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உடற்கல்வி என்றால் என்ன?


ருக்கு நீடித்துழைக்கும் ஆற்றல், கடினமாக உழைக்கும் போதும் அதற்கு ஈடுகொடுத்து உழைக்கின்ற திறமையும். செயல்களில் நுணுக்கமும் மிகுதியாகிட உதவுகிறது.

2. தசை நரம்புகளின் ஒருங்கிணைந்த சிறப்பியக்கம் (Neuro-Muscular Co-ordination)

மனிதருடைய செயல்களை நரம்பு மண்டலமே கட்டுப்படுத்துகிறது. நரம்பு வலிமை பெறுவது மெதுவாகவும், தசைகள் வலிமை பெறுவது சற்று விரைவாகவும் ஏற்படும். ஆக, தொடர்ந்து செய்து வருகிற ஒழுங்கான பயிற்சிகள் மூலமாகவே நரம்புகளும் தசைகளும் சேர்ந்து சிறப்பாக வலிமையுடன் இயங்குகின்றன.

ஒரு காரியத்தை நுண்மையாகவும், நேர்த்தியாகவும் செய்ய தசை நரம்புகளின் ஒருங்கிணைந்த இயக்கம் அவசியமாகிறது. இந்தக் கூட்டு இயக்கம் மேன்மையாக அமைந்திருப்பவர், அன்றாட வேலைகளை ஆற்றலுடன் செய்து முடிக்கும் திறமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரது உடலும் அழகுற அமைந்திருப்பதுடன், அவரது உடல் இயக்கமும் காண்பதற்குக் கவர்ச்சியும், அசைவில் நளினமும் கொண்டிருக்க, அவர் எளிதாக இயங்குகிறார். இனிமையாகத் தன் பணிகளை முடித்து மகிழ்கிறார்.

3. பயன்மிகு ஓய்வு இயக்கம்: (Attitude towards Leisure)

ஒய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கத் தெரியாதவர்களுக்கு, வாழ்க்கையில் ஒயாத பிரச்சினைகள் உருவாகின்றன. சில சமயங்களில் சமூக விரோதமான செயல்களில் ஈடுபடவும் உத்வேகம் அளிக்கிறது.