பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
53
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விஞ்ஞான நாகரீகக் காலம், மக்களுக்கு அதிகமான ஒய்வு நேரத்தை ஒதுக்கித் தந்துள்ளது. அதை அறிவார்ந்த முறையில் பயன்மிகு ஒய்வு இயக்கமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களே, களிப்புடன் வாழ்கின்றனர்.

இதை இளமையிலே கற்றுக் கொண்டால், முதுமை வரை தொடரும் ஒய்வை உல்லாசமாகக் கழிக்க உதவும். உடலை வலிமையாகக் காத்திருக்கவும் வழிகாட்டும்.

ஆக, உடல் இயக்கச் செயல்களில் தாங்கள் உடல் அமைப்புக்கும் வலிமைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு ஈடுபட்டு, பயன்மிகு காரியங்களை ஒய்வு காலத்தில் செய்து சீராக வாழ உடற்கல்வி உதவுகிறது. அதற்காக நிறைய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், அம்சங்கள் உள்ளன.

4. சிறப்பான ஆளுமையும் சமூகப் பண்பாடும் (Personality & Social Behaviour)

தனிப்பட்ட மனிதர்களை சிறந்த குடிமகனாக உருவாக்க, விளையாட்டு உற்சாகப்படுத்துகிறது.

மனிதன் என்பவன் கூடிவாழும் மிருகம் என்பார்கள். அவனது மனிதக் கூட்டத்திற்கு சமுதாயம் என்பது பெயர். சமுதாயத்தில் சேர்ந்து வாழவும், சிறந்தவராகத் திகழவும், ஒவ்வொருவருக்கும் கட்டாயமான கடமைகளும், கட்டுக்கோப்பான குணநலன்களும் வேண்டும்.

தன்னடக்கம், சுயநலமற்ற பொதுநலம், பொறுமை, ஒற்றுமை, கீழ்ப்படிதல், தலைமைக்கு விசுவாசமாக இருத்தல், கோப தாபங்களை அடக்குதல், பெருந்தன்மையுடன் பழகுதல் போன்ற குணங்களும், சிறப்பான ஆளுமையும், சமுதாயத்தை செழுமையாக்குபவை. இவை