பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உடற்கல்வி என்றால் என்ன?5. உணர்வு எழுச்சிகளைக் கட்டுப்படுத்தி, பெருந்தன்மையான பண்புகளை வளர்த்தல்.

வேறுபல அறிஞர்களும், உடற்கல்விக் குறிக்கோள்கள் என்னென்ன வென்று விளக்கிக் கூறினாலும், அவையெல்லாவற்றையும் தொகுத்துப் பகுத்துப்பார்த்தால், அவை 4 பிரிவுகளிலே அடங்கிவிடுகின்றன. இந்த நான்கு பிரிவுகளையும் நாம் விளக்கமாக அறிந்து கொண்டாலே, உண்மையான உடற்கல்விக் குறிக்கோள்களின் பெருமைகளை நாம் புரிந்து கொண்டவர்களாகின்றோம்.

1. உடல் வளர்ச்சிக் குறிக்காேள் (Physical Development Objectives)
2. சீரான செயல் வளர்ச்சிக் குறிக்கோள் (Motor Development Objectives)
3. மனநல வளர்ச்சிக் குறிக்கோள் (Mental Development Objectives).
4. சமூக நல வளர்ச்சிக் குறிக்கோள் (Social Development Objectives)

தனிப்பட்ட ஒருவரை எந்த அளவுக்கு உடற்கல்வி உயர்த்துகிறது. உன்னதப்படுத்துகிறது உயர்ந்த வாழ்வு வாழச் செய்கிறது என்பதை இனி நாம் இங்கே விரிவாகக் காண்போம்.

தனிப்பட்ட ஒருவரை, தானே தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், தனது திறமையின் அளவினைப் புரிந்து கொள்ளவும், அவற்றை வளர்த்துக் கொள்ளவும் உடற்கல்வி எவ்வாறு உதவுகிறது என்பதையும், வாய்ப்பளிக்கிறது என்பதையும் விளக்கமாகக் காண்போம்.