பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாஉடற்கல்வியின் முக்கிய குறிக்கோளே உடல் நலத்தைப் பெருக்குவது தான். உடல் நலத்தைக் குறைக்கும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, தீர்க்கும் வழிகளைத் தீர்க்கமாகக் கற்றுத் தருவது உடற்கல்வி, அதனால்தான், வளமான வேலைக்கு வளமான உடல் வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறி வழிகாட்டுகிறது உடற்கல்வி.

4. வேலை வளர்ச்சிக்கு :

உடற்கல்வி வேலை வாய்ப்புக்கு மட்டும் அறிவினை வழங்காமல், பெற்ற வேலையை பெரிதும் விரும்பவும், நிறைவாக வளர்க்கவும் கூடிய அரிய யோசனைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.

சரியான அணுகு முறை. சரியான சிந்தனை, பொருட்கள் மீது அகலாத கவனம், பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், பராமரித்தல், பக்குவமாகக் கையாளுதல் போன்ற பண்பாற்றல்களை வளர்த்து, ஒருவர் செய்யும் வேலையின் வளர்ச்சிக்கு உயர்வாக உதவுகிறது.

அத்துடன், பயன்படுத்துகின்ற பொருட்களின் மேல் போதிய கவனம் செலுத்தவும், பல்வேறு விதமான பொருட்களைக் கையாளும் புத்திக் கூர்மையை வளர்த்துக் கொள்ளவும், பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, பத்திரப் படுத்துவது, பழுதுபட்டுப் போகாமல் கையாளுவது போன்ற உத்திகளையும் உடற்கல்வி கொடுத்து, வேலையில் திறமை பெருகி, வருமானம் நிறைந்து வாழ்வை உயர்த்திடும் வண்ணம் வாய்ப்புக்களை உருவாக்கித் தருகிறது.