பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
உடற்கல்வி என்றால் என்ன?



அத்தகையப் பொறுப்புணர்வுப் பண்புகள், வீட்டில் இருக்கும்போதும், நாட்டில் வாழும் போதும் முன்வந்து நிற்கின்றன. முனைந்து செயல்படத் துண்டுகின்றன.

விளையாட்டுக்களில் ஜனநாயகம் ஒரு முக்கியமான நிலையாகும். எல்லோருக்கும் சமவாய்ப்பு. சம அந்தஸ்து சம உரிமைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.

நல்ல விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்களில் பங்கு பெறும்போதே, மேற்காணும் ஜனநாயகக் குணங்களை குறைவறக் கற்றுக் கொள்கின்றனர்.

ஜனநாயகத்தைக் காக்கும் கற்ற குடிமகன்களாக வாழ வைக்கும் மேன்மையை அடைய உடற்கல்வி தனது குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறது என்பதை இதுகாறும் அறிந்தோம்.

இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் உடற்கல்வியின் குறிக்கோள்கள் என்ன என்பதைத் தொகுத்துக் காண்பாேம்.

தனிப்பட்ட மனிதர்களை உடலால், உடல் உறுப்புக்களின் வலிமையான இயக்கத்தால், மூளை வளத்தால், உணர்வுகளைக் காத்துக் கட்டுப்படுத்தும் பண்பால் வளர்த்திட உடற்கல்வியின் குறிக்கோள் இருக்கிறது.

உடலால், மனதால் சமநிலையான வளர்ச்சிபெற; சமூகத்தில் அண்டை அயலாருடன் அனுசரித்துப்போக, ஒத்து உறவாட உடற்கல்வியின் குறிக்கோள் குறிவைக்கிறது.

தனிப்பட்ட மனிதர்களின் ஆளுமையை (Personality) வளர்த்து வீட்டில் நல்ல மகனாக சமுதாயத்தில் உயர்ந்த திருமகனாக, நாட்டில் நல்ல குடிமகனாக உயர்த்தும்