பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

73


அல்லது சமுதாயத்தின் செழுமைக்கும் சீர்மைக்கும் உதவுவதாகக் கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாம் உலகத்தின் உன்னத உயர்வுக்கு உபயோகமானவைகளே.

தத்துவங்கள் நிறைந்த நம்பிக்கையிலிருந்து பெறப்படுகிற கொள்கைகள், உயர்ந்த வாழ்க்கையை மனிதர் வாழ உதவி உற்சாகம் ஊட்டுபவைகளாகவே உள்ளன. அத்தகைய கொள்கைகள் நிதர்சனமாக நேரில் பார்க்க முடியாதவை. ஆனால் அவை பண்புகளாக விளங்குபவையாகும்.

அதாவது நன்னெறிக் கொள்கைகள் (moral), அழகை ஆராதிக்கும் கலையுணர்வு கொள்கைகள் (Aesthetic) சமூகப்பண்பாடுகள் (Social values) போன்றவையெல்லாம் இந்தப் பிரிவில் அடங்கும்.

மனித சமுதாயம் எப்பொழுதுமே புத்துணர்ச்சி மிக்கது. அது புதிய அனுபவங்களிலும், கண்டுபிடிப்புகளிலும் மகிழ்ந்து திளைக்கின்ற சக்தியைப் பெற்று விளங்குகிறது. அது மரபுகளையும் தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் சமூக நலங்களையும் சந்தித்து, அவை களை நேரத்திற்கு நேரம் காலத்திற்குக் காலம் மாற்றி அமைத்துப் புதுப்பித்துக் கொண்டு, பயன்படுத்திக் கொள்கிற ஆற்றலையும் பெற்றிருக்கிறது.

அந்த அரிய பண்புகளில்தான், உலகக் கலாசாரம் உருவாகிறது; உலக நாகரிகமும் முகிழ்த்தெழுகிறது.

இதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றுகிற கலாசாரமும், நாகரிகமும் மக்களுக்கு மக்கள், தேசத்துக்குத் தேசம், இடத்துக்கு இடம் மாறுபட்டும் வேறு பட்டும் கிடக்கிறது. அதாவது மனித இனத்துக்கு,