பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உடற்கல்வி என்றால் என்ன?


 தின் வழியாக வந்த கொள்கைகளானாலும், அவை மனித இனத்தைப் பற்றி மகிமைப்படுத்துகின்ற நோக்கத்தை, குறிக்கோளை, கொள்கைகளைக் கொண்டவையாகவே விளங்குகின்றன என்பதுதான் உடற்கல்வியின் உன்னதமான கொள்கைகளாகும்.

உடற்கல்வி கொள்கை பற்றிய குறிப்புக்கள்

உடற்கல்வி என்பது ஒழுக்கம் கற்பிக்கும் உயர்ந்த கலை. உன்னதமான தொழில்.

உடற்கல்வியின் தொழிலானது குழந்தைகளுக்குப் பெருந்தசை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களைத் தொகுத்துத் தந்து, ஆளுமை (Personality) போன்ற பெரும் பண்புகளை வளர்த்துத் தருவதாகும்.

தாெழில் (Profession) என்பது கொள்கைகளையும், வழிநடத்தும் வளமான, பயிற்சி முறைகளையும் கொண்டதாகும். அது அற்புதமான அறிவியல் கொள்கைகளையும் கொண்டிருப்பதாகும்.

உடற்கல்வி என்பது வணிகம் (Trade) அல்ல.தொழில்.

தொழில் என்பது விஞ்ஞானக் கருத்துக்களையும், நம்பிக்கையுள்ள தத்துவார்த்தக் கருத்துக்களையும் உள்ளடக்கி உருவானதாகும்.

வணிகம் என்பது சட்டங்கள்,சட்டத்தைநடத்துகிற விதிமுறைகள், மார்க்கங்கள், நோக்கங்கள் கொண்ட அமைப்புகளால் ஆனது.

உடற்கல்வி என்பது சிறந்த தொழிற் பணியாகும். அதன் அடிப்படை ஆணிவேர் போன்ற கருத்துக்கள் எல்லாம் அறிவானவை, தெளிவானவை. தீர்க்கத் தரிசனம் நிறைந்தவை. தேடிவந்து சுகம் கொடுக்கும் திவ்யமானவை.