பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
82
உடற்கல்வி என்றால் என்ன?


மிருகங்களைப்போல அல்லாமல், உடல் இயக்கத்தில் நல்ல சமநிலையான இயக்கத்தை உண்டுபண்ணி மனிதர்களை மகாநிலையில் வைத்துக்காத்து வாழ்விக்க, உடற்கல்விக் கொள்கைகள் உதவுகின்றன.

4. உளவியல் (Psychology)

தனிப்பட்ட மனிதர் ஒருவரின் உடல் மற்றும் சமூக அமைப்பைச் சேர்ந்த செயல் முறைகளில், எவ்வாறு சிந்தனையுடன் செயல்படுவது என்று விளக்கமாக விவரிப்பது உளவியலாகின்றது.

மனிதரின் இயற்கையான சுபாவம், அவரது நடத்தை பற்றி விளக்கிக் கூறுவது உளவியலாகும்.

குழந்தைகளின் உளப்பாங்கை அறிந்து கொண்டு ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என்பது உளவியல் கொள்கையாகும்.

நவீன உளவியலானது அனுபவங்களின் இயல்பு; கற்றல் விதிகள், மனிதத் தேவைகள், உற்சாகம் ஊட்டும் முறைகள், தனிப்பட்டவர்களின் ஒற்றுமை வேற்றுமைகள், உணர்வுகள், பயிற்சிகளில் பரிமாற்றம் செய்து கொள்ளும் முறைகள் போன்றவற்றில் புதிய புதிய உத்திகளை உருவாக்கியிருக்கின்றது.

தனிப்பட்டமனிதர்களின் இயல்பையும், அவர்களுக்குரிய தேவைகளையும் ஆராய்ந்தே, உடற்கல்வியும் செயல்முறைத் திட்டங்களை வகுக்கிறது.

உடற்கல்வியானது மனிதர்களைத் தகுதியுள்ளவர்களாக, தன்மையுள்ள மனிதர்களாக, சேவை மனப்பான்மை கொண்ட பயனுள்ள மக்களாக மாற்றிடஎல்லா வகையான நோக்கங்களையும், முறைகளையும், தத்துவங்களையும் ஆராய்ந்து சிறந்த வழிகளை வகுத்தளிக்கிறது.