பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

91


பிடிக்கிறது. மதிப்பீடு செய்கிறது. இவ்விதமாக அறிவுகளைச் சேகரிக்கிறது.

அவ்வாறு அறிவைச் சேர்த்து, சேகரித்து வைக்கிற தத்துவ முறைகள் பலதரப்பட்டனவாக இருக்கின்றன.

தத்துவம் போல வேறு எதுவும் உலகில் பழமையானது இல்லை. வாழ்க்கையிலும் உலகத்திலும் விளைந்து வருகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளைப் பற்றித் திறமாக ஆய்ந்து, தெளிவாகத் தேர்ந்து, முறையான வழிகளில் விடையளிக்க முற்படும் சிறப்பான முனைப்பான அறிவேதத்துவமாகும்.

அவை ஆறு வகைப்படும்.

1. ஆரம்பம் அறியும் அறிவு (Metaphysics)

மெட்டாபிசிக்ஸ் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, ஆரம்பம் பற்றி அறிகின்ற அறிவு முறை என்று அர்த்தம் இருக்கிறது.

எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தொடக்கம் அதன் குணம், வாழ்வின் தொடக்கம், இறைவனின் இயற்கைக் குணம் போன்றவற்றை ஆராயும் அறிவு முறையாக இது செயல்படுகிறது.

மனிதன் என்பவன் யார்? வாழ்வு என்பது என்ன? இறப்பு என்பது என்ன, இப்படிக் கேள்விகள் கேட்டு கேட்டு, விடைபெற முயல்வது தத்துவத்தின் ஒரு பிரிவாகும். மனித உடலும் மனித மனமும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து, உதவிக் கொண்டு, ஒப்பற்ற பணியாற்றிக் கொண்டு வருகின்றன.

ஏனெனில், மனித வாழ்க்கையானது மண்ணுலகில் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளின் நீரோட்டமான போக்கிலே