பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0

இத்தகைய உடலமைப்பும், வசதி வாய்ந்த வாழ்க்கையும் நமக்கு அமைந்திருக்கிறது.

ஆதிகால நமது முன்னேர்கள், மிருகங்களோடு கானகத்தில் வாழ்ந்தபோது, மி ரு க வாழ்க்கை வாழ்ந்ததுபோலவே, தங்கள் உயிர்களைக் காப்பதற் காக அவைகளுடன் போராடி வாழவும் நேர்ந்தது.

அப்பொழுது அவர்களது வாழ்க்கையில் சுறு சுறுப்பு மிகுந்திருந்தது. எச்சரிக்கை நிறைந்திருந் தது. எந்த நிலையினை சமாளிக்கவும் அவர்கள் உடல் தயாராக இருந்தது. அவர்கள் வாழ்க்கை வீரம் மிகுந்ததாகவும், தீரச்செயல்கள் நிறைந்ததாகவும் தொடர்ந்து வந்தது.

இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை பத்திரமான வாழ்க்கை.பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை.தேவை கள் நிறைந்து, உழைப்பு குறைந்த வாழ்க்கை.

உடலில் உழைப்பு குறைய குறைய, உ - ல் மைப்பு குறையத் தொடங்கியது. பல உறுப்புக்கள் நாகரீக வாழ்க்கையின் அமைப்பால் பயன்படா மலேயே பலம் இழக்கத்தொடங்கின.

நம்முடைய உடல் அமைப்பினை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான், ஏன் உறுப்புக்கள் பயன் பெற வேண்டும்? பலம் பெற வேண்டும். என்ற நோக்கமும் நுணுக்கமும் நன்கு புரியும். உடலின் அடிப்படை அமைப்பு

உடலின் அடிப்படை அமைப்பு செல்களாகும். செல்களின் தொகுதிகள்சேர்ந்து திசுக்களாக(Tissues)