பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



11

மாறுகின்றன. திசுக்கள் கூடி தசைகளை (Muscles) உருவாக்குகின்றன. தசைகள் கூட்டம் ஒன்ருகி, உறுப்பாக (Organ) மாறுகின்றன. பல உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து மண்டலமாக (System) மாறிவிடுகின் றன. பல மண்டலங்களின் பிணைப்பே நமது உடல் அமைப்பாகும்.

உடலமைப்பினைப் பற்றி ஆராய்ந்த உயிர் நூல் அறிஞர்கள், 'உடலுக்கு அதிக இயக்கமும், உறுப்பு களுக்குப் போதிய பயிற்சியும் தேவை” என்று கூறு கின்ருர்கள்.

மூளையும் அதனைச் சார்ந்த நரம்பு மண்டலமும் மனித இனத்தின் பெருமைக்கும் புதுமைக்கும் எல் லைக் கோடாக விளங்குகின்றன.

நாம் ந ம து மூளைக்கே வேலை தர முயல் கின்ருேமே ஒழிய, மூளைக்கு முன் வந்த தேகத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. புதியமூளை பொலிவு பெறவும், வலிவு பெற்றுப்பயன் தரவும், அதே சம யத்தில் பழையனவாகிய தசைக்கூட்டம் தகுந்த முறையிலும் பராமரிக்கப்பட வேண்டாமா!

நம் உடலை பராமரிக்கவும், உயர்சக்தி வாய்ந்த மூளையின் ஆற்றலைப் பெருக்கவும், பாதுகாக்கவும் வந்த உயர்ந்த கல்விதான் நமது உடற்கல்வியாகும்.

உடற்கல்வி ஏன்?

உடற்கல்வி என்பதுவெறுமனே உடலைவளர்த்து விடுகின்ற, தசைகளைக் கரடு முரடாக வளர்க்கின்ற,