பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2

முரட்டுத் தனமும், மூர்க்கத்தனமும் நிறைந்த மக் களை உருவாக்கி விடுகின்ற கல்வி அல்ல.

மைேதத்துவ அடிப்படையில் மனித உடற்கூறு முறையினை உன்னிப்பாக ஆராய்ந்து, அதற்கேற்ற வாறு விஞ்ஞான முறையின் விவேக வழியிலே உரு வாகி செயல்படுவதுதான் உடற் கல்வியாகும்.

உடற்கல்வி என்பது உடலுக்குரிய கல்வி. உட லால் இயங்கி, உள்ளத்தால் உணர்ந்து, தேவை யெல்லாம் உடல் நலத்துக்கே. உள்ளத்தின் வளத் துக்கே’’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் தொடர் வது தான் உடற் கல்வியாகும்.

உடற்கல்வியின் அடிப்படை நோக்கம், இதில் ஈடுபடுவோரை இயற்கையாகவே (Naturally) ஆவலு டன் பங்குபெறச் .ெ ச ய் து, அவராகவே தாங்கள் செய்யும் செயல்களில் ஆழ்ந்து, தன்னுள் மறைந்து கிடக்கும் அரிய திறன்களை தங்களை அறியாமலே திறம்பட வளர்த்துக் கொள்ளும் வழி முறைகளை காட்டிவிடத் துணைவருவது தான். ஊக்கம் தருவது தான்.

உடலை மட்டும் வளர்ப்பதோ அல்லது தனியாக உள்ளத்தை மட்டும் பயிற்றுவிப்பதோ அல்ல உடற் கல்வியின் நோக்கம்.

உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் முழுமை யாக வளரவேண்டும் என்ற ஒருமைப்பாட்டுப் பண் பாட்டினைத்தான் இது வளர்க்கிறது.