பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

1. பணிவுடையவராக, பிறருக்குத் துண்ைதரும் பண்பாளராக, தியாக உணர்வுள்ளவராக, நட் புடைமை நிறைந்தவராக, பிறருடன் கூட்டுறவுடன் வாழ்பவராக, மற்றவர்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் தெரிந்தவராக மாற்றி அமைக்கிறது.

2. வாய்மை தவருதவராக, நாட்டுப்பற்று மிகுந்தவராகப் பயிற்சி அளிக்கிறது.

3. தலைமையேற்கும் பயிற்சியை அளித்து (Leadership), தலைமையேற்று நடத்திச் செல்லும் வாய்ப்பினைத் தந்து வழி காட்டுகிறது.

4. வெற்றி பெறும் நேரத்தில் வெறிபிடித்த வர் போல மகிழ்வதும், தோல்வி கண்ட நேரத்தில் எல்லாவற்றையும் இழந்தவர்போல் தொய்ந்துவிழு வதும் இல்லாத மனம் :உடையவராக, வெற்றி தோல்வியை ஒரே மன நிலையில் ஏற்கும் பண்புடைய வராக மாற்ற உதவுகிறது.

5. தவறிழைக்கும் வாய்ப்பு இருந்தாலும் தவறு இழைக்காத பெருந்தன்மையுடன், நேர்மை யாகவும் நிதானமுடையவராகவும், உண்மையான பாசத்துடன் பழகவும், போன்ற சிறந்த பண்புகளில் பழக்கத்தினை ஏற்படுத்தி, மக்களை பண்பாட்டில் மறு மலர்ச்சி மிகுந்தவராக்கும் உயர்ந்த நோக்கத் தையும் உடற்கல்வி கொண்டிருக்கிறது.

இத்தகைய அரிய பண்புகளே, உடற்கல்வி யானது, மனிதரது இயற்கையான இயக்கங்களின் மூலமாகவே வளர்த் துவிடுகிறது என்ருல், அத்