பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

தகைய உடல் இயக்கங்கள் எவை என்று நாம் இனி காண்போம்.

உடலில் விளையும் இயல்பான இயக்கங்கள்.

நடத்தல், ஒடுதல், தாண்டுதல், எறிதல், அடித் தல், துள்ளிக் குதித்தல், குட்டிக்கரணம் போடுதல், உயரே ஏறுதல் போன்ற செயல்கள் அனைத்தும், மனிதருடன் கூடவே பிறந்த இயற்கையான இயக் கங்களாகும்.

ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொருவரும், மேலே குறிப்பிட்ட இயக்கங்களில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டேதான் இருக்கின்ருர்கள்.

இவ்வாறு அன்ருடம் செய்கின்ற இயக்கங் களின் மூலம் நிகழ்கின்ற செயல் முறைகளால்தான் நமது வாழ்க்கைமுறையே மாறிக் கொண்டு வரு கின்றது.

மகிழ்வூட்டும் இயக்கங்கள்

இத்தகைய இயல்பான இயக்கங்களை, இனி தான இசைவான பயிற்சிகள் மூலம் உற்சாகப் படுத்தி ஊக்குவித்தால், மனித வாழ்வு மகிமையும் சிறப்பும் பெறும் என்ற அடிப்படையில் அமைந் தவைதான் ஒட்டப்பந்தயங்கள், எறியும் போட்டி கள், விளையாட்டுப் போட்டி முறைகள், நீச்சல் போட்டி, குத்துச் சண்டை, மல்யுத்தம், கம்பியின் மேல் விளையாடல், மலையேறிச் செல்லல் போன் றவையாகும்.