பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

என்ற அமைப்பினுாடேதான் இதன் நோக்கமும் குறிக்கோளும் அமைந்திருக்கின்றன.

இனி, உடலியக்க செயல் முறைகளின் (Physical Activities) நோக்கத்தை காண்போம்.

1. உடல் இயக்கத்தின் மூலம் தசைகளும், நரம்பு மண்டலமும் ஒன்ருக இணைந்து சீராக செயல் படக்கூடிய ஆற்றலை வளர்த்து விடுவதன் மூலம், சுறுசுறுப்பு நிறைந்த சுகமான உடலமைப்பை உருவாக்குவது.

2. கூன் விழுந்தது போலவோ, வானம் பார்த்து நடப்பது போலவோ, முன் நிமிர்ந்து பின் வளைந்தது போலவோ, காணும் வெறுக்கத்தக்க தோற்றமுள்ள உடலமைப்பு ஏற்படாதவாறு தடுத்து, நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றலை நல்குவது.

3. நடையில், உடல் அசைவில் மற்றும் பணி புரிதல் போன்ற சமயங்களில் எல்லாம் ஒருவித லயம் 15555 spañawrib First fig (Rhythm Of Movement), பிறர் பார்த்துப் போற்றத் தகுந்த அளவிலே செயல் படும் தன்மையை வளர்த்து விடல்.

4. நிமிர்ந்து நிற்கத் தெரியாதவர்கள், கூன் விழுந்து தோற்றம் அளிப்பவர்கள், அழகுறத் தோன்ற மாட்டார்கள். வாழ்க்கையின் இனிய ரகசி யமான செம்மாந்த தோற்றத்தைப் பெற முடியா மல், இனிய வாழ்க்கையை அனுபவிக்கும் ஆற்றல் அற்றவர்களாகவே அவர்கள் விளங்குகிருர்கள்.

எல்லா உயிரினங்களிலுமே, ம ணி த ர து உடலமைப்பு தான் நிமிர்ந்து எழிலுற நிற்கின்ற அமைப்புடையதாகும். மிருகங்களுக்கும், மனிதர் களுக்கும் வேற்றுமை வேண்டாமா?