பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

செயல்படுதல், உறுதியுடன் செயல்படுதல், வெற்றி தோல்வியில் ஒரே உணர்வினை பெறுதல் போன்ற இனிய குணங்களைப் பெறும் பண்பினை, இத்தகைய இயக்கங்கள் வளர்க்கின்றன.

8. உடலியக்க செயலுக்காக உகந்த முறையில் உருவாக்கப் பட்டவைதான் விளையாட்டுக்களும், மற்ற உடற் பயிற்சி முறைகளும். கட்டுடற் பயிற்சி முறைகள் (Calisthenics): காரணப் பயிற்சி முறைகள் (Stunts) a-l sò Luísb@ (p6opsoir (Gymnastics); விளையாட்டுக்கள் (Games); உடலாண்மை போட்டி நிகழ்ச்சிகள் (Track and Field Events); தற்காப்பு விளையாட்டுக் கலைகளான குத்துச் சண்டை, மல்யுத்தம், கராத்தே போன்றவைகள் மகிழ் ஆட்டும் தன்மையில் அமைந்த நடனம், கும்மி, கோலாட்டம் போன்ற அமைப்புகள் எல்லாம், மேலே கூறியகொள்கையினை உருவாக்கித் தர உறு துணையாக அமைந்தவையாகும். 5.உடலியக்க செயல்முறைகள் ஏன்?

இயற்கையே நமக்கு இந்த உடலியக்கத்தைப் பிறந்த உடனேயே அளித்திருப்பது விந்தையிலும் விந்தைதான்.

பிறந்த உடனேயே குழந்தை கையையும் காலையும், உதறிக் கொண்டு அழுகிறதே, அப் பொழுதே உடல் அசைவுகள் ஆரம்பித்து விடுகின்றன.

அது உயிர் வாழத் துடிக்கின்றது. இயக்கமாக மட்டும் அல்ல, உடல் வளர்வற்காக அதாவது தசைகளும், நரம்பு மண்டலங்களும், உறுப்புகளுக்கு உரிய தேவைகளைப் பெறவும், குழந்தையின் வளர்ச்