பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I

விக்கு ஏற்றவாறும் தான், இந்த உடலியக்கங்கள்

அமைந்திருக்கின்றன To

முதலில் உடலுறுப்புக்களை நெளிப்பது, பிறகு ாவது தவழ்வது, தத்தித் தத்தி நடப்பது, ஆடுவது குதிப்பது போன்ற அடிப்படை உடலியக்கச் செயல்கள் எல்லாம், உடல் வளர்ச்சிக்காக, உடல் வேண்டி விரும்பி நிற்கின்ற இயக்கங்களாகும்.

ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு அடிப்படை வைக்கு ஆதாரமாகவும், காரணமாகவும் விளங்கு Iெ)து.

இந்த அடிப்படை ஆதார சுருதியாக விளங்கும் உடல் இயக்க முறைகளை ஆராய்ந்த உடல் இயல்

அறிஞர்கள் கீழ் வருமாறு கூறுகின்ருர்கள்.

ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 மணியிலிருந்து 5 மணி வரையிலும், நடுத்தர பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு விருந்து 4 மணி வரையிலும், உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கு 2லிருந்து 3 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1 லிருந்து மணி வரையிலும் உடற் தசைகள் உறுப்புக்கள் இயங்குகின்ற செயல்முறை உடலியக்கங்கள் தேவை என் ருெர்கள்.

இத்தகைய அரிய உடலியக்கச் செயல்முறைகளே விளயாட்டு மூலம் வளர்த்து, அரிய பயன்களை அடையச் செய்து, ஈடுபடும் இளைஞர்களையும், மாணவ மாணுக்கியர்களையும், பெரியவர்களையும் மகிமை பெற வாழச் செய்வதுதான் உடலியக்க செயல் முறைகளின் ஒப்பற்ற நோக்கமாகவும் உயர்ந்தகொள்கையாகவும்அமைந்து விளங்குகிறது.