பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

முழங்கால்களே முழுக்க மடித்து, (தரையில் உட்கார்ந்து விடாமல்) குதிகால்களுக்கு மேற்புற மாகவே குந்தியிருத்தல். 14. £65till (Twist)

அடிக்கடி பயிற்சிகளில் பயன்படுகின்ற சொல். இ டு ப் பி னை பக்கவாட்டில்

சுழற்றி வருதலைத்தான் (Twist) திருப்பு என்கிருேம்.

கைகளை, அல்லது இடுப்பினை முறுக்கிச் சுழற்றும்போது, கால் களே இருந்த இடம் விட்டு, நகர்த் தவே கூடாது. குறிப்பிடும் உறுப் புக்களைமட்டுமே முறுக்கிச்சுழற்ற வேண்டும். இ த னை வலிந்து பண்ணக்கூடாது. இதை இயல் பாக, பொறுப்புடன் செய்ய வேண்டும்.

15. @ŭ©j @lu Noi (Relax)

ஒரு குறிப்பிட்ட உறுப்பினை, பயிற்சியின்போது முன்புறமாகவோ, பின்புறமோ, அழுத்தித் தள்ளி (Press) மூச்சினைப் பிடித்து நின்றதற்குப் பிறகு, அவ் வுறுப்பினை ஆசுவாசப்படுத்தி, முன்பு இருந்த இயல் பான நிலைக்குக் கொண்டு வந்து இளைப்பாறி இருத் தலையே (Relax) ஒய்வு பெறு என்கிருேம்.

அதற்காக உடலில் தொய்வோ, கால்களில் மடிப்போ, இடுப்பில் சாய்வோ இருக்கக்கூடாது.