பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அழகான உடலமைப்பைத் தரும் பயிற்சிகளைத்தான் உடலழகுப் பயிற்சிகள் என்றும் கூறுகிருேம்.

இவ்வளவு ஏற்றமும் ஊட்டமும் தரத்தக்கப் பயிற்சி களைப் பின்பற்றி செய்யவேண்டிய வழிகளையும் இனி

காண்போம்.

பயிற்சி செய்யும்போது யாருக்காகவோ செய்கிருேம் என்ற அடிமை மனப்பான்மையுடன் செய்யக்கூடாது.

‘நமது உடலுக்காகவும் நலத்திற்காகவும்தான் செய் கிருேம். இது நமது கடமை. நம் உடலுக்கு நாம் செய்யும் தொண்டு’ என்ற திருப்தியான மனதுடன், உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.

இந்தப் பயிற்சியில் இந்த பயன் கிடைக்கும் என்பதை உணர்ந்து, அந்தப் பயன் கிடைக்கிறது என்ற நம்பிக்கை உணர்வுடன் பயிற்சியைத் தொடரவேண்டும்.

பயிற்சி செய்யும்பொழுது உடல், உடற்பயிற்சி, அந்தப்

பயன் இவற்றைத் தவிர, வேறு எந்த நினைவும் மனதில் தோன்றக் கூடாது.

ஒரு பயிற்சியை ஒரு முறை செய்துவிடுவதால் மட்டுமே நாம் எதிர்பார்க்கின்ற பலன் கிடைத்துவிடாது. இதை பல முறை, பலநாள் தொடர்ந்து செய்தால்தான், தசைகள் உருவாகும். வலுவடையும்.

பயிற்சி செய்வது போன்ற பாவனை எப்பொழுதும் Jn. L–T351. உண்மையாகவும், உறுதியாகவும் செய்ய வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் காட்டுகின்ற வழியினை உணர்ந்து கொண்டு, ஆசையுடன், அக்கறையுடன் பயிற்சி செய்யவேண்டும். ஐயம் வந்தால் கேட்டுத் தெளிந்து, அதனையே பின்பற்றவேண்டும்.