பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை






79

(66) 1. கைகளைப் பக்கவாட்டிலிருந்து தலைக்கு மேலே உயர்க்தி, இடது காலை பக்கவாட்டில் வைத்து நில்.

2. கைகளைப் பக்கவாட்டில் தாழ்த்தி, வலது காலை பக்கமாகச் சாய்த்து, இடுப்பை வலது பக்கமாக வளைத்து நில்.

3. முதல் எண்ணிக்கை போல் நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(67) 1. பயிற்சி ஆரம்பநிலை: முன்புறம் சாய்ந்து நில். (Leaning)

2. இடது கையை முன்புறமாகவும், மேற்புறமாகவும் வேகமாக வீசி, வலது காலை மேற்புறமாக தூக்கி உதை.

3. பயிற்சி தொடக்கம் போல நில். அதே போல் இடது கால், வலது கால் என்று மாற்றி மாற்றி செய்.

(68) 1. இடது காலும், வலது கையும் முன் புறமாகவும், இடது கை பின்புறமாகவும் உயர்த்தித் துள்ளிக் குதி.

2. மீண்டும் துள்ளிக் குதித்து, கால், கைகள் இருந்த இடங்களை மாற்றி நில். (அதாவது வலது கால் முன்புறம் வந்து நிற்க, வலது கை பின்புறமாகவும், இடது கை முன்புறமாகவும் போவது போல).

3. அதே போல் மாற்றி மாற்றி பயிற்சியை செய்யவும்.