பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





80

(69) 1. முழங்கால்களை முழுதும் மடித்து குதிகால்களின் முன்னே உள்ள தரையில், கைகளை வைத்துக் குதிகால்களில் உட்கார்.

2. சற்று முன்னே சாய்ந்தவாறு, கால்களை பின்புறம் நீட்டு. (முன்புறம் சாய்ந்திடு – ஒய்வு பெறு-கால்களை நீட்டு.)

3. முதல் எண்ணிக்கை போல நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(70) 1. கைகளை முன்புறமாக உயர்த்தி, அரை அளவு முழங்கால்களை மடித்து உட்கார். (Half Squat)

2. கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தி, முழு அளவு முழங்கால்களே மடித்து உட்கார்.

3. முதல் எண்ணிக்கை போல இரு. 4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(71) 1. பயிற்சியின் ஆரம்பநிலை: கைகளே பக்க வாட்டில் விரித்திருந்து, கால்களை அகற்றி விரித்து நில்.

2. இடுப்பினை முன்புறமாகக் கீழாக வளைத்துக் குனிந்து, இரண்டு கைகளாலும் இடது கணுக்காலை (பற்றிப்) பிடித்து நில்.

2. இயல்பாக நிமிர்ந்து நில்.

குறிப்பு

    எங்கெங்கு மூச்சிழுத்துச் செய்யும் பயிற்சிகளை இணைத்துக் கொள்ளமுடியுமோ. ஆங்காங்கே சேர்த்துக் கொள்ளவும்