பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 () உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் உடலைக் கெடுக்கின்ற உருக்குலைக்கின்ற காரியங்கள் எல்லாமே கள்ள காரியங்கள். தீய காரியங்கள். புகைப்பது, குடிப்பது போன்ற காரியங்கள் மட்டுமா தீய காரியங்கள்? அதிகமாக உண்பது, அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது, இரவு நேரங்களில் துங்காமல் கண் விழித்துக் கிடப்பது போன்ற காரியங்கள் கூட தீய வழக்கங்கள் தான். எதிலும் ஒரு அளவு வேண்டும். அடக்கம் வேண்டும். எந்தச் செயலிலும் ஒரு நிதானம் வேண்டும். நியாயமும் வேண்டும். அளவு மீறுகிறபோது அடக்கம் மாறுகிறது. நிதானம் குறைகிறது. நியாயம் மறைகிறது. நேர் மாறானவையே நடக்கிறது. நிலை குலைவும் ஏற்படுகிறது. ஆக, தேகத்திற்குத் தேவையானது சரமாரியான உபசாரங்கள் என்பதை விட, சராசரியான உபகாரங்களே வேண்டும். சத்துள்ள உணவு, தேவையான உறக்கம், தூய ஆடை, இயற்கையோடு ஒத்துப் போகிற பழக்க வழக்கங்கள். இவற்றுடன் ஒழுங்கான உடற்பயிற்சிகள் தாம் ஒருவருக்கு வலிமையான உடலைக் கொடுக்கின்றன. அழகான உடலை அளிக்கின்றன. அப்படி என்றால், அழகு என்றால் என்ன பொருள்? அழகுக்கு அர்த்தம் புரிந்து விட்டால், அறிவுக்கு ஆண்மை வந்துவிடும் நடத்தும் காரியம் எல்லாம்